இந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் 99 பேர் காணாமல் போயுள்ளதுடன், 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் மகாராஷ்டிராவில் நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை பலியானவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய ரூபாவில் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ராய்கட், ரத்னகிரி, கொல்ஹாபூா் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.