முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமி இஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை குறைந்தது 30 அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுமியை கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்திற்கு பணியமர்த்துவதற்காக அழைத்து வந்த 60 வயதுடைய தரகரின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் தற்சமயம் தரகர், பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ரிஷாத் பதியூதீனின் மைத்துனரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.