வத்தளையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது நாளை (ஜூலை 26) காலை 10.00 மணிமுதல் அடுத்த 24 மணிநேரம் வரை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்தவேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை - நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலையில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி, நாயகந்த சந்தி வரையிலான அனைத்து குறுக்கு வீதிகள், அல்விஸ் டவுன், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலககதூவ வீதி மற்றும் கெரவலபிட்டியின் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.