சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 149 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் இதுவரை 52,000 க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 45,000 க்கும் அதிகமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், 7000 பேர் மீது வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.