நாட்டில் வருடாந்தம் 800 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தகவல்

Published By: Vishnu

25 Jul, 2021 | 07:31 AM
image

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுநோயால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலகில் நீரில் மூழ்குவதால் வருடமொன்றுக்கு 220,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பதுடன், அவற்றில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே பதிவாவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2019 ஆம் ஆண்டில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 144,000 க்கும் மேற்பட்ட மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

33 ரயில் சேவைகள் இரத்து 

2024-11-14 13:55:28
news-image

காலி சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம்!

2024-11-14 13:49:39
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:57:23
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23