ராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த லேடீஸ் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பை வழங்க சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி முன்வந்துள்ளது.
ராணி சந்தன சவர்க்காரத்தின் இரு மேலுறைகள் அல்லது ராணி சந்தன சவர்க்காரம் 4 in 1 economy pack இன் மேலுறை ஒன்றை தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றுடன் இணைத்து “ராணி சந்தன சைக்கிள் அதிர்ஷ்டம்” த.பெ.இல. 04, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அனுப்புவோருக்கு 30 லேடீஸ் சைக்கிள்கள் (மாதமொன்றில் 15 சைக்கிள்கள்) எட்டு வார காலப்பகுதிக்கு வழங்கப்படும் என கம்பனி அறிவித்துள்ளது. இந்த ஊக்குவிப்பு காலப்பகுதி 2015 நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான இரு மாத காலப்பகுதிக்கு முன்னெடுக்ப்படும். இதிலிருந்து வெற்றியாளர்கள் வாராந்த மற்றும் மாதாந்த குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
“இந்த ஊக்குவிப்புத் திட்டம் என்பது, எமது உண்மையான வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. சந்தையில் காணப்படும் தூய சந்தன சவர்க்காரமாக எமது ராணி சந்தன சவர்க்காரம் அமைந்துள்ளது என்பதில் இவர்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்” என சுவதேஷி இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
“ராணி சந்தன சவர்க்காரத்தில் அடங்கியுள்ள சந்தனம் அதன் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு புகழ்பெற்றதாகும். சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் பேண இது உதவியாக அமைந்திருப்பதுடன், ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் துர்மணமற்ற சருமத்தை பேண உதவுகிறது. இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலமாக இந்த விடயங்கள் தொடர்பில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ராணி சந்தன சோப் என்பது அழகிய பெண்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு ராணி சோப் வகைகளின் சந்தைப்படுத்தல் நாமமாக, “அழகு ராணிகளின் தெரிவு” என்பது அமைந்துள்ளது.
1941ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராணி வர்த்தக நாமம், சந்தன சோப் வகைகள் உற்பத்தில் அசைக்க முடியாத முன்னிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாக திகழ்கிறது.
சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் இலங்கையில் முதல் முறையாக மூலிகை சவர்க்கார உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்த நிறுவனமாக சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. கம்பனியின் புத்தாக்க மற்றும் ஆய்வு அடிப்படையிலான அபிவிருத்தி செயற்பாடுகள், சந்தையில் பல புதிய தயாரிப்புகளை முதன் முதலில் அறிமுகம் செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. இதில் ராணி சந்தன ஷவர் ஜெல் மற்றும் கொஹோம்ப ஹேர்பல் ஷவர் ஜெல் ஆகியவற்றை குறிப்பிட முடியும்.
1941ஆம் ஆண்டு கந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப் பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான “லிட்டில் ப்ரின்சஸ்” ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM