பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான சகலவிதமான வன்முறைகளுக்குமான நீதி கோரிய  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று திருகோணமலையில் இன்று (24.07.2021) இடம் பெற்றது. 

திருகோணமலை பெண்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை திருகோணமலை அநுராதபுரச் சந்தியில் பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.

இதன் போது, அனைவரும் கட்சி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து தங்கள் ஆதரவை வழங்குமாறும்,பாதிக்கப்படும்  பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சரியான தீர்வு வழங்க வேண்டும், இன மத மொழி கடந்து பாதிக்கப்படும் மக்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,  அரசினால் முன் வைக்கப்பட்ட  சட்ட திட்டங்கள்  அரச அதிகாரிகளினால் சரியான வழிமுறைகளுக்கு அமைய துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் , மனித வியாபாரத்தை தடுத்தல், அரச அதிகாரிகளின் பொறுப்பு கூறல், தற்போது சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக நடைபெறும் அனைத்து தொடர் வன்முறைகளுக்கு எதிராகவும், சிறுமி ஹிஷாலினிக்காகவும் மக்கள் மையப்படுத்தப்பட்ட போராட்டம் ஒன்றை சமூக மட்ட பெண்கள்  குழுக்கள்  சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நீதியான வெளிப்படைத்தன்மையுள்ள விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். சிறுவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் மேலும் பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.