திருகோணமலை சர்வ சமய குழு அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்  இன்று (24.07.2021) திருகோணமலை மாவட்ட சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.

சமய சகவாழ்வு சுதந்திரத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள்  என்ன என்பது பற்றி இங்கு கலந்துரையாடி ஆராயப்பட்டது.   

சூம் வாயிலாக இக் கலந்துரையாடலை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகத் லியனாராச்சி வளவாளராக செயற்பட்டு நெறிப்படுத்தி விளக்கமளித்தார்.