ஜெய் பீம்

24 Jul, 2021 | 02:31 PM
image

ஜெய் பீம்  என்ற பெய­ரோடு  நடிகர் சூர்­யாவின்  39 ஆவது திரைப்­ப­டத்தின் முதல்­பார்வை நேற்று வெளி­யா­னது. இந்த படத்தின் பெயர் மிக  பெரிய அள­வி­லான வர­வேற்பைப் பெற்­றுள்­ளது .

ஜெய் பீம் என்­பது திரைப்­ப­டத்தின் பெயர் என்­ற­துமே இது இயக்­குநர் ரஞ்­சித்தின் திரைப்­ப­ட­மா­கத்தான் இருக்கும் என அனை­வரும் நினைத்­தி­ருப்பர்.ஆனால் இதனை இயக்­கு­வது இயக்­குநர் ஞானவேல்.

உண்­மையில்  ஜெய்பீம் என்ற வார்த்தை தற்­போ­தைய காலக்­கட்­டத்தில்  இயக்­குநர் ரஞ்­சித்தின் மூலமே  அதிகம் பிர­ப­ல­ம­டைந்­தி­ருக்­கின்­றது என்றால் மிகை­யில்லை..

இயக்­குநர் பா.இரஞ்­சித்தின் நீலம் பண்­பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்­கார்ட்ஸூம் இணைந்து ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசை நிகழ்ச்­சியை  முதல் முதல் நடத்­திய போது கானா பாடல்­க­ளுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து ‘ப்யூஷன்’ வடி­வத்தில் உரு­வாக்­கப்­பட்ட 20 பாடல்கள் முதல் முறை­யாக மேடையில் இசைக்­கப்­பட்­டது. 

இதில்,

ஜெய் பீம் என சொல்­வோமே! சாதிகள் இல்லை வெல்­வோமே!

கற்பி! ஒன்­றுசேர்! புரட்­சிசெய்!

கற்­றுக்­கொள்ள தினம் முயற்சி செய்!

என இன்­று பிர­பல பாட­க­ராக விளங்கும் அறிவின் குரலில் பறை இசை  தெரிக்க  பாடப்­பட்ட பாடல்தான்  ஜெய் பீம்.  இத­னை­ய­டுத்து இந்த வார்த்தை மேலும் பிர­ப­ல­ம­டைய தொடங்­கி­ய­து.

ஜெய் பீம்’ என்றால் என்ன?

ஜெய் பீம் என்றால் ஒளி,

ஜெய் பீம் என்றால் அன்பு,

ஜெய் பீம் என்றால் இரு­ளி­லி­ருந்து வெளிச்­சத்தை நோக்­கிய பயணம்,

ஜெய் பீம் என்றால் பல கோடி மக்­களின் கண்ணீர்த் துளி!

என ஒரு மராத்­திய கவித்தை கூறு­கி­றது.

இந்­திய அர­சி­ய­ல­மைப்பை தந்த டாக்டர் அம்­பேத்­காரின் கொள்­கை­களை பின்­பற்­று­ப­வர்­க­ளினால்  பயன்­ப­டுத்தும் சொல்­லா­டல்தான் ’ஜெய் பீம். பீம் என்றால் அம்­பேத்­கரைக் குறிப்­பது. ஜெய் என்றால் இந்­தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்­பேத்­க­ருக்கு வெற்றி என்­பது பொருள். 1936இல் அம்­பேத்­கரின் பிறந்­தநாள் சம­யத்தில் மும்பை சால் பகு­தியில் அவ­ரது ஆத­ர­வாளர் ஒருவர் அவ­ருக்கு வாழ்த்து தெரி­விப்­ப­தற்­காக ஜெய்பீம் எனச் சொன்­ன­தா­கவும். பிறகு பெரும்­பான்­மை­யான மக்கள் அந்தச் சொல்லை உப­யோ­கிக்கத் தொடங்­கி­விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஜெய் பீம் ! என்ற முழக்­கத்­திற்குப் பின்னே ஒரு வீர வர­லாறு உண்டு என்ற கதையும் உண்டு.  

மராட்­டி­யத்தை 1800-களில் பார்ப்­பன பேஷ்­வாக்கள் ஆண்டு வந்­தனர். அப்­போது,இந்­து­மத வேதப்­பண்­பா­டு­களும்,மனு­சாஸ்­திரக் கொடு­மை­களும் மிகக்­க­டு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. தலித்­துகள் பகலில் தெருக்­களில் நட­மா­டக்­கூ­டாது;நடந்­தாலும் தெருவில் எச்சில் துப்­பி­வி­டக்­கூ­டாது;எச்­சிலைத் துப்­பு­வ­தற்கு தம் கழுத்தில் ஒரு மண் கல­யத்தைக் கட்­டித்­தொங்க விட்­டுக்­கொண்டு வர­வேண்டும்

தலித்­களின் கால் தடத்தைப் பார்ப்­ப­னர்கள் மிதித்தால் பார்ப்­ப­னர்­க­ளுக்குத் தீட்­டா­கி­விடும்.அதனால் அவர்கள் பின்­ப­கு­தியில் ஒரு பனை ஓலையைக் கட்­டிக்­கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனை­ஓலை தனது கால் தடத்தை அழித்­துக்­கொண்டே வர­வேண்டும். தலித்கள் கல்வி கற்­கக்­கூ­ட­டாது.ஆயுதம் வைத்­தி­ருக்கக் கூடாது.

இவை­போன்ற எண்­ணற்ற சாஸ்­திர, சம்­பி­ர­தாயக் கொடு­மை­க­ளுக்கு எதி­ராக, தாழ்த்­தப்­பட்ட மக்­களும்,பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­களும்,சிறு­பான்மை இஸ்­லா­மி­யரும் இணைந்து ஆயுதப் போராட்­டத்தைத் தொடங்­கினர். 1817 டிசம்பர் 31 இரவு. புனே நக­ருக்கு அருகே கோரிகான் என்­ற­ஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்­க­ரைதான் போர்க்­களம்.

2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்­பன மன்­னனின் தள­ப­தி­யான, ‘கோகலே’ தலை­மையில் 28000 பார்ப்­ப­னப்­ப­டை­வீ­ரர்கள் ஒரு­புறம்.500 தாழ்த்­தப்­பட்ட மகர் சமு­தாய வீரர்­களும்,100 பிற்­ப­டுத்­தப்­பட்ட, இஸ்­லா­மியச் சமு­தாய வீரர்­களும் இணைந்த படை மறு­புறம். போர் தொடங்­கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்­பனப் படை­வீ­ரர்கள் கொல்­லப்­பட்­டனர்.

பார்ப்­பனப் படைத்­த­லைவர் கோகலே களத்­தி­லேயே  உயி­ரி­ழந்தார் ஆயி­ரக்­க­ணக்­கான பார்ப்­ப­னர்­களும், அவர்­களின் ஆத­ரவுப் படை­களும் சித­றின. பாஜிராவ் கைதானார்.

வெற்­றியின் நினை­வாக, சாதி ஒழிப்புப் போரா­ளிகள் விதைக்­கப்­பட்ட ‘பீமா’ நதிக்­க­ரையில் ஒரு வெற்­றிச்­சின்னம் நிறு­வப்­பட்­டது. 1927 ஜன­வரி 1 இல் அம்­பேத்கர் இந்த நினை­வி­டத்­திற்குச் சென்றார். அன்­றுதான் பீமா நதிக்­கரை வெற்­றியின் நினை­வாக “ஜெய் பீம்” எனும் வெற்றி முழக்கம் வெடித்­த­தா­கவும் ஒரு கதை உள்­ளது. மேலும் அம்­பேத்கர் ஒவ்­வொரு வரு­டமும் கோரேகான் பகு­திக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்­சலி செலுத்தி வந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இவர்­ ஒரு வழக்­க­றிஞர், அர­சி­யல்­வாதி, பொரு­ளா­தார வல்­லுநர், பெண்­ணி­ய­வாதி, கல்­வி­யாளர் என்­ப­தனை தாண்டி ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான ஒற்­றைக்­கு­ர­லாக ஒலித்­தவர். தாழ்த்­தப்­பட்ட மக்­க­ளுக்­கா­கவும் சாதிய கொடு­மை­க­ளுக்கு எதி­ரா­கவும் தொடர்ந்து பாடு­பட்டு வந்­த­மையால், இன்றும் அவரை தலித் மக்கள் ஒரு கடவுள் போல கொண்­டா­டு­வ­தனை அறிவோம். அந்­த­வ­கையில்  அம்­பேத்­காரை அவ­ரது கொள்­கை­களை பின்­பற்­று­ப­வர்கள் கொண்­டாடும் வார்த்­தைதான் ஜெய் பீம். நமக்கு தெரிந்த பிர­ப­லங்­களில் இயக்­குநர் ரஞ்­சித்தே இந்த வார்த்­தையை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்றார்.

நிகழ்­கா­லத்தில் மக்­களின் மிக பெரிய ஊட­க­மான சினி­மாவில் தலித் அர­சி­யலை சிறப்­பாக பேசும் இயக்­குநர் ரஞ்சித் , திரைக்கு வெளி­யிலும் அவர் தலித்­துக்­க­ளுக்­காக அர­சியல் பேசிக்­கொண்­டி­ருக்­கிறார்.

 அம்­பேத்­கரின் 127ஆவது பிறந்­த ­நாளை முன்­னிட்டு, அவ­ரது நீலம் பண்­பாட்டு மையம் சார்பில் 'ஜெய்பீம் ஆன்தம்' வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக்­கு­ழுவைச் சேர்ந்த கலை­ஞர்­களால் இந்தப் பாடல் உரு­வாக்­கப்­பட்­டது.

இந்தப் பாடலில், அம்­பேத்­கரின் சிறப்பு, இன்­றைய சூழலில் நிலவும் சாதியம், சமத்­துவம் உள்­ளிட்­டவை குறித்து பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

மேலும் தனது நீலம் அமைப்பு மூலம், தலித் கலை, பண்­பாடு ஆகிய தளங்­களில் பெரிய அள­வி­லான கலை நிகழ்ச்­சி­களை நடத்­தியும் வரு­கிறார். அத்­தோடு, தலித் அர­சி­யலைப் பேசும் திரைப்­ப­டங்­களை தயா­ரித்தும் வரு­கிறார். 2019ஆம் ஆண்டில்  நீலம் பதிப்­ப­கத்தை தொடங்கி  நீலம் கலை, இலக்­கிய மாத இத­ழையும் வெளி­யிட்டு வரு­கிறார்.

ஒரு கட்­டத்­துக்கு நாம் சென்று விட்டால் நமது அடை­யா­ளங்­களை பலர் மறைத்து விடுவர். பொது­வாக தாழ்த்­தப்­பட்ட சாதிய அடை­யா­ளங்­களை பலரும் வெளி­காட்ட விரும்­பு­வ­தில்லை. ஆனால் எதற்கு நான் எனது சாதியை மறைக்க வேண்டும் நான் நான்­தானே என தைரி­ய­மாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தி கொள்­வதில் இவ­ருக்கு ­மாற்று இருக்க மாட்­டார்கள்.

இன்றும் தமி­ழ­கத்தில் சாதிய கெள­ரவ கொலைகள் நடக்­கத்தான் செய்­கி­ற­து.சக மனி­தனை சாதி என்­ற பார்­வையில் ஒதுக்கி வைக்­கின்ற பண்­புகள் மாறவே இல்லை. இதை மாற்ற அர­சியல் வாதிகள் யாரும் முயற்­சித்­தி­ருக்­கி­ன்­றார்­களா என்று தெரி­யாது. ஆனால் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக இவ­ர­து குரல் ஒலித்­துக்­கொண்டு இருக்­கின்­றது.

அம்­பேத்கார் கொள்­ளை­களை கடைப்­பி­டிப்­ப­தோடு ஜெய்பீம் என்ற வார்த்­தைக்கு தற்­போ­தைய நிகழ் காலத்தில் உணர்­வு கொடுத்­தது இவர்தான்.

இந்­நி­லையில்  தற்போது  சூர்யாவின் 39ஆவது திரைப்­படத்தின் பெயர் ஜெய்பீம் என்று உறு­தி­யாகி உள்­ளமையால் அனை­வ­ரது கவ­னமும் இந்த வார்த்தை மீதே திசை  திரும்­பி­யுள்­ள­து. ஜெய்பீம் என்­பது  உண்­மையில் இரு­ளி­லி­ருந்து வெளிச்­சத்தை நோக்­கிய பயணமே., திரைக்கு வெளி­யே இயக்­குநர் ரஞ்சித் போன்ற சிலர் அதற்­கா­கதான் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

குமார் சுகுணா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41