பெண்கள், சிறுவர்களுக்கெதிரான குற்றங்களைப் புரிவோருக்கு தண்டனை வழங்குகையில், இனம், மதம், கட்சி பேதங்கள் தடையாக அமையக்கூடாது: சஜித்

By J.G.Stephan

24 Jul, 2021 | 02:13 PM
image

(நா.தனுஜா)
நாடளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிபவர்களுக்கு எதிராக உரியவாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு இனம், மதம் மற்றும் கட்சிபேதங்கள் தடையாக அமையக்கூடாது. இருப்பினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, அது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ளும் வகையில் அமையாதிருப்பதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.  

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்கு முறையைப் பிரயோகிக்கும் வகையிலான தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பு வடக்கின் இங்குருகடை சந்தியிலிருந்து புதுக்கடை சந்தி வரையான எதிர்ப்பு ஊர்வலமொன்று நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், நாடளாவிய ரீதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை, அவர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. அவர்களுடைய உரிமைகளும் சுதந்திரமும் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right