யாழ்.குருநகர் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஒரு தொகுதி வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியிருந்தனர்.

இதன்போது டிஎன்டி(TNT) வெடிமருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
