பெண் குழந்தைக்கு பெற்றோரான ஆர்யா, சாயிஷா தம்பதிகள்..!

By J.G.Stephan

24 Jul, 2021 | 12:43 PM
image

பிரபல நடிகரான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு குழந்தை பிறந்துவிட்டதாக, நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் ஆர்யா, நடிகையான சாயிஷாவை கடந்த  2019ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, இவர்கள் நடிப்பில் வெளியான டெடி படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால், அதன் பின் சாயிஷாவையே பார்க்க முடியவில்லை.

அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், நடிகை சாயிஷா பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right