யாழ் - அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்றிரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
எனினும், உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பான பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தின் டயர் பகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
இன்று அதிகாலை 1.40 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த பொலிசார் மறித்த போது வாகனம் நிறுத்தாது சென்றதன் காரணமாக உழவு இயந்திரத்தின் சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM