(எம்.மனோசித்ரா)
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முகத்துவாரம் பிரதேசத்தில் 6 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 13 இலட்சம் ரூபாய் பணமும் குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

பணாமுர - முல்லெட்டியாவல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது பயிரிடப்பட்டிருந்த 3,075 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.