(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரையும் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரரையும் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை இலக்கம் - 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பிலும், குறித்த சிறுமி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் மனித வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தமை தொடர்பிலும் முன்னாள் அமைச்சரின் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை இலக்கம் - 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இது தவிர இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிரிழந்த சிறுமி குறித்த வீட்டில் பணிபுரிவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்த பிரிதொரு பெண்ணும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த பெண்ணும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
அவரும் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை , இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் , கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு - தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஆகியன இணைந்து இது தொடர்பில் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM