கொவிட் தொற்றிற்கு அச்சுறுத்தலாக அமையும் மதுசார பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்திய தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள்;

Published By: Gayathri

24 Jul, 2021 | 06:23 AM
image

மதுசார பாவனை கொவிட் தொற்றிற்கு பெரும் அச்சுறுத்தல் என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருந்தது. 

அதாவது மதுசாரம் அருந்துவோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைந்த அளவே காணப்படுவதனால் கொவிட் மிக துரிதமாக தொற்றக்கூடிய நிலைமை உள்ளது. 

மதுசாரம் அருந்துபவர்கள் நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம் போன்ற பல தொற்றா நோய்களுக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் அவர்களின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கப்படுகின்றன. 

எனவே கொவிட் தொற்றினால் மரணம் ஏற்படக்கூடிய அபாயம் மதுசார பாவனையாளர்களுக்கு அதிகமாகும். மதுசாரம் அருந்துவோர்கள் அதிகமான பணத்தை மதுசாரத்திற்காக செலவழிப்பதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு மூலக்காரணியாக அமைகின்றது. 

ஏனெனில், கொவிட் காலப்பகுதியில் வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில், இக்காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் ஏற்றம் ஏற்படுகின்றது.

எனவே இக்காலப்பகுதியில் பணம் இன்றியமையாத ஒன்றாகும். மதுசாரம் அருந்துவோர்களுக்கு சமூக இடைவெளியை பேணுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. 

குறிப்பாக மதுசாரசாலைகளில் வரிசையில் நிற்கும்போதும், ஒன்றாக இணைந்து குடிக்கும்போதும் தொற்று ஏற்படுவதற்கும், சமூகப்பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகம். 

சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட இடங்களிலேயே குடிப்பதனால் முகக்கவசம் சரியான முறையில் அணியமுடியாமல் போகின்றது. 

குடிக்கும் நேரத்தில் ஒரே குவளையில் அல்லது ஒரே போத்தலில் மதுசாரம் அருந்தும்போது அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாகும். 

மதுசார பாவனையாளர்கள் சரியான முறையில் சுகாதார முறைமைகளை கடைபிடிக்காமையினால் வீட்டில் உள்ளோர்களுக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் அதிகமாகும்.  (அநேகமாக குடிப்பவர்கள் மதுசாரத்தின் அசௌகரியம் குறைந்துவிடும் என்று குளிப்பது இல்லை, கைகளை கழுவுவதில்லை)

மேலும் பெருந்தோட்டங்களில் காணப்படும் பொருளாதார சிக்கல்கள், சுகாதார சீர்கேடுகள், தொழில்வாய்ப்பின்னை, குறைந்த ஊதியம் பெறுகின்றமை ஆகிய அடிப்படை பிரச்சினைகளின்  கணதியை மதுசார பாவனை அதிகரிக்கின்றமை பல ஆய்வுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொணடு கொவிட் தொற்றின் பாதிப்பை குறைப்பதை மையமாகக்கொண்டு நுவரெலியா பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையம் ;(PHDT) மற்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) ஆகியன இணைந்து தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் முழு களப்பணியுடன் கடந்த மே மாதம் தொடக்கம் ஜூலை (இம்மாதம்) வரை 20 தோட்டங்களில் மதுசார பாவனையாளர்களிடைய பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். 

தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் தங்களின் தோட்டங்களில் பாவனையாளர்களை தெரிவு செய்து அவர்களின் மதுசார பாவனையில், மதுசார பாவனையின் பின்னரான நடத்தைகளில், சேமிப்பு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்வந்தனர். 

கொவிட் தொற்றிற்கு பிரதான அச்சுறுத்தல் காரணியாக மதுசாரம் அமைந்திருக்கின்றது. ஆகவே அத்தொற்றிலிருந்து மதுசார பாவனையாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் எனும் கருப்பொருளை மையமாக வைத்து இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதற்காக பத்து மூலவளங்களை துறைசார்ந்தோர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய வடிவமைத்தனர். மதுசார பாவனை கொவிட் தொற்றிற்கு எந்தளவு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதை விபரிக்கும் வகையிலேயே அவை அமைந்திருந்தன. இதில் குறிப்பாக அவ் உத்தியோகத்தர்கள் இணைந்து நடித்த குறுந்திரைப்படமும் அடங்கும். 

ஒரு மகன் எவ்வாறு தந்தையின் மதுசார பாவனை கொரோனா தொற்றிற்கு ஆளாக்கி விடுமோ என எந்தளவு அஞ்சுகிறான் என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டியிருந்தனர்.

ஓவ்வொரு பதிவுகளையும் தொலைபேசியினூடாகவே பாவனையாளர்கள் மத்தியில் தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் கொண்டு சேர்த்திருந்தனர். 

வீட்டிற்குள்ளேயே மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப பாவனையாளரின் வீட்டிலுள்ள அங்கத்தவர்களையும் உத்தியோகத்தர்கள் தொடர்பு படுத்திக்கொண்டனர். 

மதுசார பாவனையாளர்களை நேரடியாக தொலைபேசியூடாக அணுகியது மாத்திரமன்றி வீட்டில் உள்ளோர்கள் வாயிலாகவும் அணுகினர். 

ஓவ்வொரு கட்டங்களையும் உத்தியோகத்தர்கள் சிறப்புற கண்காணித்ததுடன் அவ்வப்போது பாவனையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

எவ்வாறு மதுசார பாவனையிலிருந்து விடுதலையாவது? இதில் மதுசார பாவனையாளர்கள் செய்ய வேண்டியது எவை? வீட்டில் உள்ளோர்கள், மனைவி, பிள்ளைகள், அயலவர்கள் செய்ய வேண்டியவை எவை? என்பது தொடர்பில் அந்தந்த தரப்பினருக்கு தெளிவுப்படுத்தியதுடன் தொடர்த்தேர்ச்சியான கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். 

இவ்வாறு சிறப்பான முறையில் கண்காணித்ததன் பலனாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள க்ளியரென்டன், சந்திரிகாமம் , பெல்மோரல், ஹென்போல்ட் , வோல்ட்ரிம் , டெஸ்போர்ட் , லோகி, சீன், ராகலை, கொங்கோடியா, ஹய் பொரெஸ்ட், வல்டெமர், டன்சினன், பீட்ரோ, கோணப்பிட்டிய, கோர்ட்லோஜ், ஹொலிரூட், ப்ரொட்டோபோர்ட், மடக்கும்புர, லிப்பகல ஆகிய தோட்டங்களில் சுமார் 100 மதுசார பாவனையாளர்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் எற்பட்டுள்ளது. 

குறிப்பாக இத்தோட்டங்களில் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதோடு, சேமிப்பு பழக்கங்கள்  அதிகரித்துள்ளது. மிக முககியமாக மதுசார பாவனையாளர்கள் ஆரம்பத்தை போன்றிலல்லாது தனது பிள்ளைகளுடனும், குடும்பத்தாருடனும் செலவழிக்கும் நேரம் அதிகரித்துள்ளது.

அனைவருடனும் பாசத்தோடு நடந்து கொள்கின்றனர் என அத்தோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் தெரிவித்தனர். 

இத்த செயற்றிட்டத்திற்கு ஒரு படிமுறை கணப்பட்டதுடன் தொடர்த்தேர்ச்சியான கண்காணிப்பு இடம்பெற்றமை இதன் வெற்றிக்கான காரணம் என தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் பொதுவாக தெரிவித்திருந்தனர். 

அத்தோடு தொடர்த்தேர்ச்சியான உற்சாகமளித்தல் அவர்களுக்கு இதில் வெற்றிகாண வேண்டும் என்ற ஒரு அவாவை ஏற்படுத்தியது எனவும் தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்க வேண்டும் அத்தோடு முறையான படிமுறையொன்று காணப்படுமிடத்து நிச்சயமாக பெருந்தோட்டங்களில் மதுசார பாவனையிலும், பாவனை சார்ந்த பிரச்சினைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தமையோடு, தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் இவ்வெற்றிக்கான சொந்தக்காரர்கள் எனவும் நுவரெலியா பிராந்திய பெருந்தோட்ட மனிதவள அபிருத்தி நிலையத்தின் இச்செயற்றிட்டத்திற்கு பிரதானமாக பங்களிப்பு வழங்கிய சுகாதார பிரிவினர் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.  

தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்களின் அயராது உழைப்பு இவ்வெற்றிக்கான பிரதான உந்துசக்தியாக அமைந்தது.

மதுசார பாவனையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அது மிகவும் இலகுவானது. அனைவராலும் வீட்டில் இருந்தவாறே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதற்கான சிறந்த உதாரணமாகவே இச்செயற்றிட்டத்தை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கருதுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம்...

2024-10-11 14:49:54
news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39