திருமண நிகழ்வுகளில் கொவிட் சட்டத்தை மீறினால் வழக்கு தொடுக்க நடவடிக்கை - பொது சுகாதார பரிசோதகர்கள்

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 08:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தீர்வில்லையேல் போராட்டம் தொடரும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் |  Virakesari.lk

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றபோதும் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல திருமண நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டல் சட்டம் மீறப்பட்டிருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடுமையான சுகாதார வழிகாட்டல் மற்றும் சட்டங்களுடனே திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் கடந்த சில வாரங்களுக்குள் இடம்பெற்ற திருமண நிகழ்வுகள் சுகாதார சட்டத்தை மீறி இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிந்திருக்கின்றது.

அதனால் நாளை முதல் நாடுபூராகவும் உள்ள திருமண விழா மண்டபங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே கொவிட் சட்டத்தை மீறி திருமண நிகழ்வுகளை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இல்லாவிட்டால் இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47