அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீதான அராஜகம் அதிகரித்துச் செல்கின்றது - சுமந்திரன் கவலை

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 08:34 PM
image

அம்பாறை மாவட்டத்தில் மாற்று சமூகத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடையங்களை தடுத்து வருகின்றது.

அதேவேளை தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது  எனவே தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி முக்கியஸ்தர்களுடன் காரைதீவு நூலக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23)   இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவார் இவ்வாறு தெரிவித்தார். 

கொரோனாவை காரணம் காட்டி செய்வதொன்று மற்றது காலகாலமாக மாற்று சமூகத்தினர் செய்கின்ற அடாவடிகள் அதிகரித்துள்ளதுடன் மாற்று சமூகத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு, தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடையங்களை தடுத்து வருகின்றனர்.

எனவே இங்கிருந்து அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி உங்களுடைய சொந்த நன்மைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக வேண்டாம்.

நாங்கள் நீதி , நியாயத்தை தூய மனதோடு செய்பவர்கள் . எந்த சமூகத்திற்கும் தீங்கு வரக்கூடாது என்று மிக தெளிவோடு எமது கருத்துகளை முன்வைக்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்களை விட குரல் கொடுத்தோம்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பலவித இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சரியாக நியாயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதனை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.

முஸ்லிம் மக்கள் இந்த விடயம் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டியது நியாயத்திற்காக பேசுகின்றார்கள் யார் என்பதனை கண்டறிய வேண்டும்.

தங்களது சொந்த நன்மைக்காகவும், வியாபாரத்திற்காகவும் செயற்படுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இனவாத அடிப்படையில் அல்லாமல் நீதி நியாயத்திற்காக முன்னிற்கின்றவர்களை ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனால் எங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்கின்ற பிரதான பொறுப்பு எங்கள் தோள்களில் இருக்கின்றது அதனை செய்வோம். பாதிக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் குரல் கொடுக்கப்பட்டதை அண்மை காலத்தில் பலர் கண்டுள்ளனர் சிலர் நன்மை பெற்றுள்ளனர்.

இனவாதத்தின் பெயரால் தமிழ்  சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம் என அம்பாறை மாவட்டதிலிருக்கும் ஏனைய சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் என  அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59