(எம்.ஆர்.எம்.வசீம்)

பணியாளர் சேவைக்கு நிறுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயதை 18 வரை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்தார்.

புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நியமனம் | archive.velaiththalam.lk

பணியாளர் சேவைக்கு நிறுத்தப்படும் அதிகமானவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவருவதை தடுத்துக்கொள்வதற்கு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பணியாளர் சேவைக்கு ஒருவரை நிறுத்தக்கூடிய வயதெல்லையை 18வரை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம், எதிர்காலத்தில் ஒருவரை பணியாளர் சேவைக்கு நிறுத்துவதாக இருந்தால் குறித்த நபருக்கு 18வயது பூரணமாக இருக்கவேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.