சீன நிறுவனம் வடக்கில் சட்டவிரோதமாக  கடலட்டை பிடிப்பதில்  சந்தேகம் இருக்கின்றது - சீ.வி.கே.சிவஞானம்

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 07:19 PM
image

( எம்.நியூட்டன்)

சீன நிறுவனம் வடக்கில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதில்  சந்தேகம் இருக்கின்றது என தெரிவித்த வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்  சீன ஆதிக்கம் இங்கு வரக்கூடிய வாய்ப்பை அளித்தது பொருத்தமானது அல்ல என தெரிவித்தார். 

Articles Tagged Under: சீ.வீ.கே.சிவஞானம் | Virakesari.lk

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் கம்பனி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்தக் கம்பனியில் சீனர் ஒருவர் ஜாஎல விலாசத்தோடுதான் கம்பனி பதியப்பட்டதாகத் தெரிய வருகின்றது. ஆகவே அது எவ்வாறு பதியப்பட்டது என்றும் தெரியவில்லை.

ஆனால் எங்களுக்குத் தெரியாத தொழில்நுட்பத்தை இன்னொருவரிடம் அவர் எவராகயிருந்தாலும் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஏன் சீனத்தவரை பங்குதாரர் ஆக்கினார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. எங்களுடைய நாட்டவர்கள் தொழில் செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

அவர்கள் செய்யலாம். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளலாம். பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு அந்த சீன ஆதிக்கம் இங்கு வரக்கூடிய வாய்ப்பை அளித்ததுதான் அவ்வளவு பொருத்தமானது அல்ல என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் செய்யலாம். அந்தக் கம்பனியல் பங்குதாரர்கள் செய்யலாம்.

அதற்காக சீன நாட்டவரை முக்கிய பங்குதாராக இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை மேலும்  வடக்கு மாகாண ஆளுநர் மாற்றம் வரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது தெரடர்பில் கேட்டபோது ஆளுநரையும் மாற்றுகின்றார்களோ தெரியவில்லை. ஏனென்றால் இந்த நாட்டில் என்ன விடயங்கள் நடைபெறும் என்பதை  எதிர்வுகூறமுடியாது உள்ளது. 

இப்போதைய ஆளுநர் இந்தப் பதவிக்கு விருப்பமில்லாமல்தான் வந்தவர் என்றுதான் என்னுடைய அறிதல். அவரும் விரும்பி விலகலாம். அல்லது அரசாங்கமும் அவரைத் தூக்கலாம்.

இந்த அரசாங்கத்திற்கு இது பெரிய பிரச்சினையும் இல்லைத்தான் இது வழமையாக நடக்கின்றவைதானே. இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். மாகாணக் காணி ஆணையாளர் குகநாதன் அப்பதவியிலிருந்து உடனடியாக மாற்றி எங்களுடைய செயலகத்திற்குத்தான் இன்று தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

செயலகத்தில் ஏற்கனவே பதில் கடமையாற்றிய ரூபினி வரதலிங்கத்தை நீக்கி அவருக்குப் பதிலாக குகநாதனை நியமித்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே அவர் காணிப் பிரச்சினை ஒன்றில் நேர்மையாக, சரியாக நடந்துகொண்டார் என்ற கருத்து இருக்கின்றது. அது சிலருக்கு முரண்பாடாக இருந்ததாக இருக்கின்றது.

ஆகவே அவர் தூக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளார். இது கூட ஒரு பொருத்தமான செயற்பாடாக நான் பார்க்கவில்லை. அது வருத்தத்திற்கும் கவலைக்குரிய விடயம். திடீரென்று அவரை தூக்கினார்கள். இங்கு தூக்கிறது என்பது பெரிய பிரச்சினை இல்லைத்தானே. அது சரியில்லாத விடயமாகும். அவர் சரியாக கடமையைச் செய்தார் என்று நான் நினைக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45