இங்கிலாந்தில் ஆயிரத்து ஐந்நூறு முகக்கவசங்களை பயன்படுத்தி மணப்பெண்ணுக்கு திருமண ஆடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டன. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள ஆடை வடிவமைப்பாளர் டொம் சில்வர்வுட் என்பவர் மணப்பெண் அணிவதற்காக 1,500 முகக்கவசங்களை பயன்படுத்தி திருமண ஆடை தயாரித்து கொடுத்துள்ளார்.

வெள்ளை நிற ஆடைஉருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடையை ஜெமிமா ஹாம்ப்ரோ என்ற மாடல் பெண் அணிந்துள்ள புகைப்படம் அதிகம் பேரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.