இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப் போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தவான் தலைமையிலான இரண்டாம் தரப்பு இந்திய அணியானது, இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆட்டத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், 2023 உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான புள்ளிகளை ஆட்டத்தின் முடிவுகள் பெற்றுக் கொடுக்கும்.

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லாவிட்டாலும் 2 ஆவது ஆட்டத்தில் கடும் இந்தியாவுக்கு கடும் சாவல் கொடுத்தனர்.

இறுதி கட்டத்தில் அசலங்கா, சமிக கருணாரத்ன இருவரும் அதிரடி காட்டி வியக்க வைத்தனர். பந்து வீச்சில் ஹசரங்கவும் சுழலும் மிரட்டினார்.

இலங்கை அணத் தலைவர் தசூன் சானக்க போட்டிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

வீரர்கள் தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து அதை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். எங்களால் வலுவாக மீண்டு வர முடியும் என்று நம்புகிறேன். சமீப காலமாக நாங்கள் சீராக வெற்றி பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் வெற்றி பெறுவது எப்படி என்பதை மறந்து விடவில்லை.

இந்த இளம் அணி விரைவில் வெற்றிப் பாதையில் நுழைய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.