கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தமையினால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒரு போத்தலில் அடைத்ததாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சோய்சா தெரிவித்தார்.
பாம்பு சுவாசிப்பதற்கு ஏதுவாக போத்தலில் சிறு துளைகள் இட்டோம். அதன்பிறகு விலங்குகளைப் பெற சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினோம்.
எனினும் யாரும் முன்வராத காரணத்தினால் இறுதியில் எங்கள் நண்பர் ஒருவர் பாம்பை ஒரு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.
வைத்தியசாலையில் பூனைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் இதற்கு முன்னர் தோன்றியிருந்தாலும், நாகப் பாம்பு தோன்றியது இதுவே முதன் முறை என்றும் புஷ்பா ரம்யானி டி சோய்சா சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM