மத்தளை மாவட்டத்தின் இரு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி மத்தளை, மத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.