(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பிரத்தியேகமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமியின் உயிரிழப்பு விவகாரம்: சிறுமியின் உறவினர்கள்  உட்பட பலரிடமும் விசாரணைகள் முன்னெடுப்பு | Virakesari.lk

பொறுப்பு கூற வேண்டிய மக்கள் பிரதிநிதியொருவர் இவ்வாறு சிறுமியொருவரை வீட்டு வேலைக்கு அமர்த்துவது பாரதூரமானதொரு குற்றமாகும். அந்த அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.