(எம்.மனோசித்ரா)
பேராதெனிய பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் இரு தடவைகள் மொடர்னா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட தடுப்பூசி வழங்கும் நிலையம் அமைந்துள்ள கஹவட கோரல பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பேராதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் குறித்த பெண் ஒரே சந்தர்ப்பத்தில் இரு தடவைகள் மொடர்னா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, மயக்கமடைந்து பேராதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.