(நா.தனுஜா)
வலுசக்தி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்திருப்பதன் விளைவாக எமது நோக்கமும் தோல்வியடைந்து விட்டதாகக் கூறமுடியாது. பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் முடிவை மாற்றியமைக்கமுடியாது என்பதை நாம் நன்கறிவோம்.
எனினும் பொதுமக்களுக்கு சில உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே நாம் நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவந்தோம். அந்த நோக்கம் வெற்றியடைந்திருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் அதன் பெறுபேறை பொதுமக்கள் வெளிப்படுத்துவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, அண்மைக்காலத்தில் நாட்டிலுள்ள பல்வேறு ஜனநாயகக்கட்டமைப்புக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி நாட்டின் ஜனநாயகத்தன்மைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில், இதுவரையான காலமும் சுயாதீனமாகப் பேணப்பட்டு வந்த மகாபொல நிதியம் தொடர்பான சட்டத்தைத் திருத்தங்களுக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள நாளிதழொன்றில் செய்தி வெளியாகியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM