ஜப்பானிய சிபா பிராந்தியத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொழில்நுட்ப செயன்முறை நிகழ்வொன்றின் போது தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படுத்தப்படும் ரோபோவொன்று நீல நிறத் தட்டொன்றிலுள்ள அணுசக்திக் கழிவை அகற்ற இரும்புத் துகள்களை பிரயோகிப்பதை படத்தில் காணலாம்.

இந்த ரோபோவானது கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி இடம்பெற்ற பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டு அணுசக்தி கதிர்வீச்சு கசிவால் இடர்பாட்டை எதிர்கொண்டுள்ள ஜப்பானிய புகுஷிமா அணுசக்தி நிலையத்திலான பயன்பாட்டுக்காக அந்நாட்டு மிட்ஸுபிஷி, ஹிடாச்சி மற்றும் டொஷிபா நிறுவனங்களின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.