வடமாகாண அதிபர் ஆசிரியர்களை, தேசிய ரீதியான போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை!

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 05:15 PM
image

நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு தாம் ஆதரவினை வழங்குவதாகவும், அத்தோடு வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினப் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே புயல்நேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசானது தனது ஆட்சிக் காலத்தில் சில கோட்பாடுகளை முன்வைத்து இருந்தது. அதிலும் 2 ஆயிரத்து 23 ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வந்தது அதேபோல் மாணவர்களின் சீருடை மாற்றத்தைக் கொண்டு வந்தது கொரோனா  காலத்திலே அவ்வாறு பல்வேறுபட்ட செயற்திட்டங்களை இந்த குறுகிய காலத்திலேயே இந்த அரசு முன்னெடுத்தது.

அரசின் சகல  செயற்பாடுகளும் பல்வேறுபட்ட மாற்றங்களும் இந்த கொரோனா காலத்திலே முன்னெடுக்கப்பட்டது. அதேபோல ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவறு என கூறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது மாணவர்களின் கல்வியில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். வட மாகாணத்தில் 13 வலயங்கள் செயல் நிலையில் உள்ளன சம்பள முரண்பாடு அதாவது 30 வருடங்களாக காணப்படுகிற சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு சகலரும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் வரை  போராட்டத்தை நாங்க முன்னெடுப்பதன் மூலம் தமக்கு உரிய உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11