(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணித்துள்ள சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். உண்மை காரணிகள் பகிரங்கப்படுத்தபட வேண்டியது அவசியமாகும். இல்லாவிடின் தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில்  முரண்பாடு தோற்றம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. என  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சாந்த பண்டார தெரிவித்தார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள்  தற்போது அதிகரித்துள்ளன. சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக பரவலாக தற்போது பேசப்படுகிறது. வெளிவராத பல சம்பவங்கள்  பல இடம்பெற்றிருக்கலாம். சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலை காணப்படுகிறது.

 சிறுவர் பாதுகாப்பு  தொடர்பிலான சட்டங்களை  சமூகத்தின் மத்தியில் முழுமையாக செயற்படுத்தும் திட்டங்கள் செயற்படுத்த வேண்டும். சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தியமைத்து சட்டங்களை  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றாட் போல் திருத்தியமைக்க வேண்டும். இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் சிறுவர் மற்றும் மகரிள் பாதுகாப்பு தொடர்பிலான குழு கூட்டத்தில் தனி நபர் யோசனை முன்வைத்துள்ளேன் என்றார்.