(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியானது கடந்த காலத்தில் அதன் பங்காளிக்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, அவற்றுடன் இணைந்து தேர்தல்களுக்கு முகங்கொடுத்தது.

எனினும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின்போது எதிர்த்தரப்பிலுள்ள பங்காளிக்கட்சிகளுடன் கூட்டணியமைத்துக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித்  மத்தும பண்டார | Virakesari.lk

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.