பெருமளவு கஞ்சா, ஹெரோயினுடன் மூவர் கைது

By J.G.Stephan

22 Jul, 2021 | 04:27 PM
image

(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 467 கிலோ கிராம் கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதோடு, ஹெரோயினுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்குளி பிரதேசத்தில் 13 கிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் 14 கிராம் ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் பெம்முல்ல பிரதேசத்தில் 4 கிராம் ஹெரோயினுடன் 63 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக  சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்து 80 000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸாரால்  நீர்கொழும்பு - கடற்கரை பகுதியிலிருந்து 467 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடல் மார்க்கமாக இந்த கஞ்சா தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right