சிகிரியா, பிதுரங்கல வாவிலிருந்து பழுதடைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சடலம் மீட்கப்படும் போது பழுதடைந்திருந்ததாகவும் பெண் மரணமான விதம் எவ்வாறென இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனவும் சில தினங்களுக்கு முன்னர் அவர் இறந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, சடலத்தின் அருகிலிருந்து மதுபான போத்தல் ஒன்றும் நஞ்சுப்போத்தலொன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.