(எம்.மனோசித்ரா)
வார இறுதி நாட்கள் நீண்ட விடுமுறையுடனானதாக காணப்படுவதால் சகல பிரதேசங்களில் தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் முறையாக பேணப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசேட கண்காணிப்புக்களை முன்னெடுக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 189 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 51,581 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 44,000 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7,000 பேருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 14 இடங்களில் 2,690 வாகனங்களில் பயணித்த 6,306 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 100 வாகனங்களில் பயணித்த 250 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களுடன் நீண்ட விடுமுறை என்பதால் தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதற்காக மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவை தவிர மாகாணங்களுக்குள்ளும் பொது அல்லது தனியார் போக்குவரத்துக்களில் தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்களை முன்னெடுக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM