இஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 02:42 PM
image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு  முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் கொழும்பில் மரணமடைந்த இஷாலினி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தீக்காயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

இது ஒரு பாரிய குற்றமாக காணப்படுவதுடன் குறித்த குற்றத்தினை மறைப்பதற்காக சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம். 

அதேபோன்று கிளிநொச்சி கல்மடுப்பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். 

அத்துடன் இணையத்தளங்களில் சிறுமிகள் விற்பனை போன்ற துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது எமக்கு கவலையளிக்கின்றது.



இதனால் நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக்குறியாகவுள்ளது. எனவே எமது நாட்டின் பெண்கள் சிறுவர்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05
news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 16:41:25
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-19 14:59:24