சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்...!

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 01:22 PM
image

சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலம் முன்பாக இன்றையதினம் (22.07.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த சிறுமியான இஷாலினியின் இறப்பிற்கான நீதியினை முன்னிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.



அதேவேளை, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மலையக சிறுமி இஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரும் வகையிலான பதாதைகளைத்  தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிரான பதாதைகள் மற்றும், சிறுவர்கள், வேலைக்கு அமர்த்தப்படுதல், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுதல் என்பவற்றினைக் கண்டிக்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06