மொடர்னா தடுப்பூசி குறித்து போலி பிரசாரம்: சமூக வலைத்தளங்களுக்கு வலைவீசும் பொலிஸ்..!

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 12:16 PM
image

(எம்.மனோசித்ரா)
சமூக வலைத்தளங்கள் ஊடாக மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுவதாக கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் கண்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அண்மை காலமாக இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் போது சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் அவை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

முகப்புத்தகம், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக மொடர்னா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாக  நேற்று புதன்கிழமை கண்டி பொது வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரியால் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  தற்போது  கண்டியை அண்மித்த பகுதிகளில் மொடர்னா தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தடுப்பூசி தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இழக்கப்படும் என்பதால் , இது தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு கண்டி பொதுவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனது முறைப்பாட்டின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மொடர்னா தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் அதில் நனோ தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால்...

2023-03-20 15:56:22
news-image

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை...

2023-03-20 15:39:44
news-image

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50...

2023-03-20 15:37:57
news-image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை...

2023-03-20 15:24:14
news-image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை...

2023-03-20 15:06:13
news-image

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து...

2023-03-20 15:27:18
news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42