இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தின் உட்கூரை பகுதி இடிந்து விழுந்துள்ளது. பெய்தும் வரும் கடும் மழையினால் குறித்த கூரை பகுதி இடிந்து போயுள்ளதுடன் அந்த கூரைப்பகுதியானது சீனாவின் தயாரிப்பு என  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சுங்கப்பிரிவு உட்பட பல பிரிவுகளின் மேல் கூரை பகுதியிருந்து மழைநீர் கொட்டியது. இதனால் கணினி உட்பட  பல உபகரணங்கள் செயலிழந்துள்ளது.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்  என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான சீன கட்டுமான பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் நிர்மானிக்கப்பட்டதாகும்.

மறுப்புறம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் பெய்த மழையின் போது விமான நிலையத்தின் மற்றொரு பகுதியும் சரிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.என்.ஐ