ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் அதிபர், ஆசிரியர்கள் ; கொழும்பில் கடும் வாகன நெரிசல்

Published By: Digital Desk 3

22 Jul, 2021 | 02:52 PM
image

(எம்.மனோசித்ரா)

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சுமார் 30 இற்கும் அதிகமான தொழிற்சங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. 

இதன் போது ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் இனக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. இதனால் இணையவழி கற்பித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளிலிருந்து தொடர்ந்தும் விலகி தமது பணிபகிஷ்கரிப்பை தொடர்வதற்கு அதிபர் , ஆசிரயர் தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வினை வலியுறுத்தியும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும் சுமார் 30 தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. 

கடந்த வாரம் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இனக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் , அதிபர் சேவை சங்கம் உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தன. சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்கொட் வீதியூடாக லோட்டஸ் சுற்றி வட்டத்தை நோக்கி பேரணியாக ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றனர். இதன் காரணமாக இன்று காலை குறித்த பகுதியை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக வளாகத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கு வீதிகளில் அமர்ந்து நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலி முகத்திடல் வீதி சுமார் 2 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்னர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கள் சார்பில் மூவருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , இலங்கை ஆசியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் பேச்சுவார்த்தை இனக்கப்பாடின்றியே நிறைவடைந்துள்ளது. தமது பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்படும் வரை போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்று தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59