மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா நிலவரம்: மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுவதென்ன?

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 11:01 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுலகம் ஊடாக 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7,863 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 112 பேர் மரணமடைந்துள்ளார்கள்.  6100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் 471 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 78,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட 90 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மயூரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56