சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம்  தடுப்பூசிகளின் மேலும் 2 மில்லியன் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் ஊடாக இந்த தடுப்பூசி அளவுகள் சீனாவிலிருந்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி அளவுகளை அசர மருந்தக கூட்டுத்தாபனத்தின் விசேட லொறிகளின் மூலமாக கொழும்பில் உள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லவும் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மொத்த சினோபார்ம்  தடுப்பூசிகள் மொத்த அளவுகள் 9.1 மில்லியன் ஆக காணப்படுகிறது.