(எம்.மனோசித்ரா)

நம்பிக்கையில்லா பிரேரணை நாடகம் நிறைவடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கத்திற்குள் வெவ்வேறு கருத்து முரண்பாடுகளுடன் காணப்பட்டவர்களை ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்க சஜித் பிரேமதாசவினுடைய தரப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

டயகம சிறுமின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்படாமல் போகுமா ? - ஜே.வி.பி.  கேள்வி | Virakesari.lk

என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,  

நம்பிக்கையில்லா பிரேரணை நாடகம் நிறைவடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

அரசாங்கத்திற்குள் வெவ்வேறு கருத்து முரண்பாடுகளுடன் காணப்பட்டவர்களை ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்க சஜித் பிரேமதாசவினுடைய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான பிரதான காரணியாக அமைந்த எரிபொருள் விலையேற்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.