(எம்.மனோசித்ரா)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் உயிரிழப்பினை அரசியல் மயப்படுத்தவும், இனத் துவேஷமாக பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித்  மத்தும பண்டார | Virakesari.lk

அறிக்கையொன்றிணை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் உயிரிழப்பு குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.  சில தரப்பு இந்த சம்பவத்தை அரசியல்மயமாக்க முயற்சிக்கின்றன.

ஏனைய சில தரப்புக்கள் இந்த துயரமான சம்பவத்தை இனத் துவேஷமாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இரு தரப்பினரின் நோக்கங்களையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்தி தாமதமின்றி சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை மூலம் மட்டுமே வேதனைக்குள்ளான தரப்புக்கு நீதி கிடைக்க முடியும்.  

இதுபோன்ற ஒரு செயற்பாட்டில், சமூகத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும், சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் இது உதவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.