டயகம சிறுமி உயிரிழப்பு விவகாரம்: சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்

By J.G.Stephan

21 Jul, 2021 | 07:30 PM
image

(நா.தனுஜா)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 15 வயதான சிறுமி உயிரிழந்து ஐந்து நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அரசாங்கம் வெட்கமடையவேண்டும்.

இதுவிடயத்தில் நிலவும் தொடர்ச்சியான மௌனமானது, இதன் பின்னால் யார் இருக்கின்றார்கள்? இது குறித்து மறைமுகமான கொடுக்கல், வாங்கல்கள் எவையேனும் இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற இச்சம்பவம் இனமோ, மதமோ அல்லது மொழியோ சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக மனிதாபிமானத்துடன் தொடர்புடைய விடயமாகும்.

நாங்கள் எப்போதும் முஸ்லிம் சகோதரர்களுடன் கைகோர்த்து ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம். எனினும் இவ்விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை.

குற்றமிழைத்தவர் எவராக இருந்தாலும், அவரை உடனடியாகக் கண்டறிந்து தண்டிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05