Zoom  தொழில்நுட்பத்தின் ஊடாக ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் வருடாந்த பொதுக்கூட்டம் 

By Gayathri

21 Jul, 2021 | 05:02 PM
image

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் வருடாந்த பொதுக்கூட்டமானது கடந்த 21ஆம் திகதி சுகாதார பிரிவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொவிட் 19 நோய் தடுப்பு வழிக்காட்டல்களுக்கிணங்க Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. 

இங்கு ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் 2020ஆம் ஆண்டிற்கான ஏராளமான சேவை உற்பத்திகளுடன் குறிப்பிடத்தக்க விசேட வளர்ச்சியினையும் காண்பித்துள்ளது.

அதற்கேற்ப 2020ஆம் ஆண்டிற்காக 7.9 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபம் மற்றும் 39.4 பில்லியன் காப்புறுதித்தவணை விகிதமாக 16.65% விசேட வளர்ச்சியினையும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் காண்பித்துள்ளது. 

2020ஆம் ஆண்டிற்குள் ஆயுள் காப்புறுதித் தவணைத் தொகை 19.8 பில்லியன் மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் 29.9% ஆகும். அத்துடன் சாதாரண காப்புறுதித் தவணை விகிதம் 6.27% வளர்ச்சியுடன் 20.1 பில்லியன் தொகையாகும். 

ஒன்றிணைந்த ஆயுள் மற்றும் ஆயுளல்லாத காப்புறுதித் தவணை வருமானத்திற்காக ஆயுள் காப்புறுதித் தொகுதியின் பங்களிப்பு 49% ஆவதோடு சாதாரண காப்புறுதித் தொகுதியின் பங்களிப்பு 51% ஆகும்.

காப்புறுதித் துறையில் தலைமைத்துவத்தை உறுதி செய்து அத்துறையில் அதிகளவு போனஸ் தொகையை தன்னகத்தே கொண்டு முன்னணியிலிருந்ததோடு 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் தமது ஆயுள் காப்புறுதியுரிமையாளர்களுக்கு 8.6 பில்லியன் போனஸ் தொகையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 15 வருடங்களில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸால் சுமார் 73.2 பில்லியன் பெறுமதியான போனஸ் தொகை தமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமது கருத்தினை வெளியிட்ட ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் தலைவர் ஜகத் வெல்லவத்த,

“எம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட 'செமட்ட ரக்ஷனயக்' எனும் செயற்றிட்டமானது நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருவதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் உறுதுணையாகும் என நான் நம்புகின்றேன். 

குறைந்தளவு பொருளாதார மட்டத்திலுள்ளவர்களும் காப்புறுதியினால் பிரதிபலன்களை அனுபவித்திட முடியும். சவால்கள் நிறைந்த காலக்கட்டங்களில் காப்புறுதியானது ஒரு பாதுகாப்பு வலையைமப்பாக செயற்படும் என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள்.

அத்தடன் எதிர்பாராத விளைவுகளின்போது அவர்களது வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் அவர்களது வாழ்க்கை மற்றும் வியாபாரத்தை பாதுகாப்பதற்கும் காப்புறுதி அவசியமாகின்றது. 

'செமட்ட ரக்ஷனய' எனும் காப்புறுதித் திட்டத்தை செயற்படுத்துவது கடினமான காரியமன்று. அவ்வாறே அதற்கான வசதிகளை 59 வருட காலமாக காப்புறுதித் துறையில் பாதுகாப்புடனான காப்புறுதியை வழங்கும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஏற்படுத்திக்கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸின் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன எல்.அலுத்கம அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

'கொவிட் 19 நோய்த்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணத்தால் பல்வேறு பிரிவுகளைப் போலவே காப்புறுதித்துறையும் வீழ்ச்சியைக் கண்டது. 

ஆனால் அச்சவால்களை எதிர்த்து ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் பல்வேறு வசதிகளை மக்களுக்கு வழங்கியது. எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கான முன்னோக்கிய பாதையை இலக்காகக் கொண்டு பல்வேறு புதிய உபாயங்களை திட்டமிட்டுள்ளோம்.

இச்செயற்றிட்டத்தை உடனடியாக செயற்படுத்துவதற்கான தேவையுள்ளதோடு அதன் முதற்கட்டமாக ஆயுள் மற்றும் ஆயுளல்லாத வியாபாரத்தை மேம்படுத்தி வியாபார வியூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக செயன்முறைகளை மேற்கொண்டுள்ளதுடன் இதனூடாக சந்தையின் தேவைக்கேற்ப வியாபாரத்தின் அளவை விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார். 

1962ஆம் ஆண்டு தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் இந்நாட்டின் மாபெரும் அர காப்புறுதி நிறுவனமாகும். 

இதன்பொழுது 25 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளதோடு 134 பில்லியனுக்கும் அதிகமான ஆயுள் காப்புறுதி நிதியைக் கொண்டுள்ள இந்நாட்டின் நிலையாக காப்புறுதி நிறுவனமாகும். 

நாட்டிலுள்ள முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் AA (lka) பிட்ச் தரப்படுத்தலையுடைய ப்ரேன்ட் பினான்ஸ் மூலம் பெயரிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பிரபலமான காப்புறுதி நாமம் மற்றும் சாதாரண காப்புறுதிக்காக தொடர்ந்தும் நான்காவது தடவையாகவும் விருதினை வென்றுள்ளது. 

அத்துடன் 'சேவையாற்றுவதற்கான சிறந்த இடம்' என்ற விருதினையும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் வென்றுள்ளது. நாடு முழுவதும் 158 பரந்துபட்ட கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18