(எம்.மனோசித்ரா)

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ரிஷாத் பதியுதீனுடைய கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.

இவ்விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது , தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணத்திற்கான நீதி நிலைநாட்டப்படாமலிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கான காரணம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதோடு , இனியொருமுறை இவ்வாறான சம்பவம் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.