பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (05) இடம்பெற்ற போதே குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.