2032 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.

இதனை, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாச் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து, அவுஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டில மெல்பேண் நகரிலும் 2000 ஆம் ஆண்டில் சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இவ்வறிவிப்பையடுத்து பிறிஸ்பேன் நகரில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.