வன்மம்

Published By: Gayathri

21 Jul, 2021 | 03:22 PM
image

குமார் சுகுணா

உண்­மைகள் பல நேரங்­களில் கசக்கும். ஆனால் எப்­போ­தும்­ அது பொய்­யா­காது. இன்று டய­கம  சிறு­மியின் மர­ணத்­துக்கு நீதி கோரி பல போராட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. 

நீதி கிடைக்­கலாம். கிடைக்­கா­மலும் போகலாம். ஆனால் கிடைக்கும் என நம்­புவோம். இந்த சம்­பவம் பல விட­யங்­களை நமக்கு உணர்த்­தி­யுள்­ளன.

இலங்­கையில் பல்­லின மக்கள் வாழ்ந்­தாலும் அவர்கள் யாரும் மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்­களை போல சிறு­வர்­க­ளையோ அல்­லது பெண்­க­ளையோ பாது­காப்­பற்ற வகையில் வேலைக்கு அனுப்பி பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தாக நாம் அறிந்­தது மிக குறைவு. 

மக்­களின் விழிப்­பு­ணர்வு அற்ற தன்­மை என்­றா­லும்,­ இ­தனை பயன்­ப­டுத்தி, வீட்டு பணிப்­பெண்­களை தேடும் பணக்­கா­ரர்கள் கூட மலை­ய­கத்­த­வர்­க­ளையே  குறி­வைத்து அதிகம் விரும்­பு­வதை பார்க்­கின்றோம்.

காரணம்  மலை­யகம் மீதான ஏனை­ய­வர்­களின் பார்வை. மிக மோச­மான பார்­வைகள் உள்­ளன என்­பது மறுப்­ப­தற்கு இல்லை. அதா­வது வர்க்க ரீதி­யான பார்வை இருக்­கின்­றது.

ஆண்டான் அடிமை நிலையில் அவர்­களை வைத்­துக்­கொள்­ளலாம் என்ற மன­நிலை. கூலி­யாட்கள் போல வைத்­துக்­கொள்­ளலாம். எது செய்­தாலும் பிரச்­சினை வராது பணத்தை கொடுத்து மாற்­றி­வி­டலாம் என்ற எண்ணம் பல­ருக்கு உள்­ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற சம்­ப­வங்கள்  இப்­ப­டித்தான் நிகழ்ந்­துள்­ளன.

மலை­யகம் என்­றாலே தாழ்­வாக பார்க்கக்கூடிய மனப்­பான்மை பல­ரிடம் உள்­ளது. அதுவும் மலை­ய­கத்தில் பிறந்து இன்று கொழும்பு உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் வசிக்கும்  பணம் எனும் சமூக அந்­தஸ்த்து கொண்­ட­வர்­க­ளி­டமும் உள்­ளது.

கொழும்பு என்றால் எல்­லாமே கொழும்பு 7ஆகவோ 3 ஆகவோ இருக்­காது. சில தெருக்­களில் கழிவு நீருக்­குள்தான் வீடு­களே இருக்கும். 

அடைச்­ச­லான ஒரு அறையில் உணவு சாப்­பிடும் இடம். உறங்கும் இடம் என்று அனைத்தும் ஒரு இடத்­தி­லேயே என்று வாழ்­ப­வர்­கள்தான் அதிகம். 

ஆனால் அங்­கி­ருந்து கொண்டு வள­மான மலை­ய­கத்தை அவர்கள் ஏள­ன­மாக பார்ப்பதை மறுக்­க­மு­டி­யா­து. மலை­யக மக்­களை இழி­வாக பார்ப்பார். மலை­ய­கத்தான்.. தோட்­ட­காட்டான்... வந்­தோ­ரி­கள்.. கூலிகள்... போன்ற வார்த்தை பிர­யோ­­கங்கள் மலை­யக மக்­க­ளுக்கு எதி­ராக பாய்­வதை நாம் மறுக்க முடி­யாது. 

கால­நிலை மாற்­றத்தால் மலை­யக பிர­தே­சங்­களில் உடல் நிறம் கறுப்­பாக மாறு­வது இயல்பு. ஆனால் அதை கிண்டல் செய்­பவர்­களும் உள்ள­னர். 

அந்த மக்­களை வர்க்க ரீதி­யாக இன்றும் கூலிகள் போன்ற கொடூர மனப்­பான்­மையில் பார்க்­கின்­ற­வர்­க­ளி­னா­லேயே  வயது வித்­தி­யாசம் இன்றி விலங்­கு­களை விட மோச­மாக இந்த மக்­களை நோக்­கு­கின்ற மன­பான்மை உரு­வா­கு­கின்­றது. 

இதன் விளை­வு­களில் ஒன்­றுதான் சிறுமி என்று கூட பாராது.. படிக்க வேண்­டிய வயதில் உள்ள பிள்­ளையை ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர், அதுவும் அமைச்­ச­ராக இருந்­தவர் தனது வீட்டின் பணிப்­பெண்­னாக மாற்­றி­யுள்ளார். 

பணிப்பெண் என்­பதை தாண்டி சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைதான் வன்மம்.

டய­கம பகு­தியைச் சேர்ந்த உயி­ரி­ழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ரிஷாட் பதி­யுதீன் வீட்­டிற்கு வருகை தந்­துள்ளார்.

இவ்­வாறு அழைத்து வரப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் குறித்த சிறு­மியின் வயது 15 வரு­டங்­களும் 11 மாதங்­களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார். 

பொரளை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பகு­தியில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாட் பதி­யு­தீனின் வீட்டில் பணி­பு­ரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த மூன்றாம் திகதி தீக்­கா­யங்­க­ளுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

குறித்த சிறுமி நீண்ட கால­மாக பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி வந்த தக­வலை சட்ட வைத்­திய அதி­காரி உறுதி செய்­துள்ளார். மேலும், பல­மா­தங்­க­ளாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கொழும்பு மேல­திக நீதவான் ரஜீந்­திரா ஜய­சூ­ரி­யவின் முன்­னி­லையில், பொரளை பொலி­ஸா­ரினால் தாக்கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற வைத்­திய பரி­சோ­தனை அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

சிறப்பு தட­ய­வியல் மருத்­துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்­பத்­துடன் இவ்­வ­றிக்கை, பொரளை பொலி­ஸா­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இறந்த சிறுமி, தாக்­கப்­ப­ட­வில்லை. சித்­தி­ர­வதை செய்­யப்­ப­ட­வில்லை. எனினும், எரி­கா­யங்­களால் உடல் 72 சத­வீதம் எரிந்­துள்­ளது. அச்­சி­றுமி கர்ப்­ப­ம­டை­யாது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் என்றும் அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மரணம் எவ்­வ­ளவு பெரிய கொடு­மை­யா­னது என்று இந்த அறிக்­கை­கை­களை பார்க்கும் போதே புரி­கின்­றது. அந்த சிறுமி வீட்டை விட்டு செல்­லும்போது 15 வய­துதான் ஆகின்­றது. 

அவ்­வ­ளவு சின்ன வயதில் பெற்றோர் அதுவும் தாய் அருகில் இருக்கும்போது  அவர் வேறு நபர்­களால்  துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாகக்கூடிய சந்­தர்ப்பம் மிகக் குறைவு. 

தோட்­டங்­களில் எல்­லோரும் கூட்­ட­மா­கவே வாழுவர். இவ்­வா­றான சந்­தர்­பங்­களில் அந்த சிறு­மியை துன்­பு­றுத்­தி­யி­ருக்க வாய்ப்­புகள் இல்லை. 

ஒரு­வ­ருட கால­மாக வீட்­டுக்கு வராமல் இவர் தங்­கி­யி­ருந்த இடத்தில் அவர் பலாத்­காரம் செய்­யப்­பட்­டி­ருக்கக்கூடும். ஒரு வேலை அந்த வேத­னையை சொல்ல முடி­யாது அந்த பிள்ளை தனக்கு தானே தீமூட்டி  மர­ணித்­தி­ருக்­கலாம். 

அல்­லது வேறு யாரா­வது பல­வந்த படுத்த பய­மு­றுத்தி இருக்கும்போது இந்த சம்­பவம் நடந்­தி­ருக்­கலாம். 

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வீட்டில் பல ஆண்கள் இருந்­துள்­ளனர். அவர்­க­ளினால் இந்த சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கக்கூடும். 

சிறு­மி தன் தாயா­ரிடம் இது தொடர்பில்  தன்னால் அங்கு வேலை செய்ய முடியாது என்றும் அழைத்துச்செல்லுமாறும், அங்கு தொழில் செய்பவர் தும்புத்தடியால் தன்னை தாக்குவதாகவும் கூறியுள்ளார். 

சிறிய பிள்ளை, அவரைத் தாக்க வேண்டாம் என கூறுங்கள் என நான் Madam இடம் கூறினேன் என்­கிறார் தாய். மேலதிகமாக நான் பணம் பெற்றுள்ளதால், நான் தொழிலுக்கு வருகிறேன் என தெரிவித்தேன் என்­றார்.

பிள்­ளையை வைத்து அதிக பணம் பெறு­வதும் கொடூ­ரம்­தான்.

இந்த மரணம் குறித்து ரிஷாத் பதி­யூ­தி­னிடம் வாக்­கு­மூலம் பெறப்­ப­ட­வுள்ள நிலையில் அவர்  சிறுமி உயி­ரி­ழந்­த­வு­ட­னையே நெஞ்சு வலி கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரு­வதால் தாம­த­மா­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் சமூக வலைத்­த­ளங்­களில் அமைச்­ச­ருக்கு ஆத­ர­வா­கவும் மலை­ய­கத்­துக்கு எதி­ரா­கவும் பலர் வன்­மத்­த­ன­மான பதி­வு­களை பதி­வி­டு­வ­தனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

மலை­யகம் என்றால்  வன்­மத்தை விதைப்­ப­வர்­க­ளுக்கு ஒன்று கூறவேண்­டும்.

நாங்கள் தமி­ழர்கள் உழைப்­பா­ளிகள்; இந்த பூமியின் மூத்த குடிகள்;  மூவேந்­தர்­களின் ஆட்சி பிர­தே­சங்­க­ளுக்குள் இருந்­த­வர்­கள்­தான் நாம்; கால கொடுமை படை­யெ­டுப்­புகள்  செல்­வங்கள் சுரண்டல் வரட்சி அதனால் ஏற்­பட்ட வறுமை பட்­டினி என காலம் அனைத்­தையும் பாவ­மாக்­கி­யது. 

செல்­வத்தை சுரண்­டி­யவன் குடி­யா­ன­வ­னாக மாற செல்­வத்தை இழந்­தவன் ஏழை­யாக்­கப்­பட்டான். இக்­கா­லப்­ப­கு­தியில் வெள்­ளை­கா­ரர்­களின் ஆட்­சியில் அடி­மை­யான நிலை. அவனால் வஞ்­சிக்­க­பட்டே இந்த நாட்­டுக்கு வந்தோம். இதுவும் எங்கள் சோழன் ஆண்ட பகு­திதான்.

ஆண்டான் அடிமை என்ற வர்க்­கத்­துக்குள் இருந்­தாலும்  கால போக்கில் இலங்­கையில் மகிழ்ச்­சி­யான வாழ்க்­கையை நோக்கி நகர்­தப்­பட்­டனர். 

இத­னா­லேயே மீண்டும் தாயகம் திரும்­பாது பலர் விரும்பி இந்த நாட்டில் இருந்­தனர். இந்­தியா தாயகம் என்­றாலும்  வரு­டத்தில் பல­முறை சொந்த ஊரை பார்த்து விட்டு திரும்பி இங்­கையே வந்­தனர்.

இலங்­கையில் ஏனைய சமூ­கங்­களை போலவே இவர்­களும் கெள­ர­வ­மான வாழ்க்கை வாழ்ந்­த­வர்கள் . இன்றும் வாழ்­ப­வர்­கள்தான்.

ஆனால், அடுத்­த­வர்­களை ஏமாற்றி பிழைக்க தெரி­யாத இவர்­களை ஏமா­ளி­க­ளா­கவே இந்த நாடும் சமூ­கங்­களும் பார்க்­கின்­றன என்­ப­தற்கு மிக சிறந்த உதா­ரணம் தான் டய­கம சிறு­மியின் மரணம். 

இதற்கு கார­ண­மான அனை­வரும் தண்­டணை அனு­ப­விக்க வேண்டும். இனியாவது சிறு­வர்­களை வேலைக்கு அனுப்­பு­வதை சட்ட ரீதி­யாக தடை செய்ய வேண்டும். இனி ஒரு தரகர் மலை­ய­கத்­துக்குள் நுழைய கூடாது. அதனை நாம்தான் தடுக்க வேண்­டும்.

ஏனைய சமூகங்கள் எம்மை பார்க்­கும் பார்வை எமது மீதான வன்­மத்­த­னங்கள் மாற வேண்டும் என்றால் எமது சமூக கட்­ட­மைப்­பை நாம் மாற்­ற­வேண்டும். அதற்கு முயற்­சிப்­போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right