மட்டக்களப்பில் டயகம சிறுமிக்கு நீதிவேண்டி பறை மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 01:48 PM
image

ரிசாத்தின் வீட்டில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமியான ஹிசாலினிக்கு நீதிவேண்டி  பறைமேளம் அடித்து வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் இன்று  (21.07.2021)  மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள வீதிசமிக்கை விளக்கு பகுதியில் கண்டன கனவயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மட்டக்களப்பு வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் தலைவி சத்தியவாணி சரசகோபால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து  வீட்டு வேலை தொழிலாளர்கள் பலர் இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், வீட்டுவேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், வேலைத்தளத்தில் பாதுகாப்பு வேண்டும். சட்டத்திற்கு முரணாக சிறுமியை வேலைக்கு அமர்த்தியதற்கு எதிராகவும், சிறுமியை சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராகவும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமைக்கு எதிராகவும், சிறுமியின் உயிரிழப்புக்கு எதிராகவும்  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

சிறுமியின் மரணம் இலங்கைக்கு அதிர்ச்சியைதரும் செய்தியாகும் என்பதுடன் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம், என்பவற்றுக்கு எதிராக கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுமி ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டது முதலாவது குற்றம்,  சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பாரிய குற்ற செயலாகும். என வாசகங்கள் எழுதப்பட்ட சுலொகங்களுடன் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53